Wednesday, January 18, 2017

அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்கும் முதல் நிகழ்வு ?


அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்கும் முதல் நிகழ்வு ?



18 ஜன,2017 - 17:58 IST






எழுத்தின் அளவு:








ஒரு திரைப்படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. தோராயமாக இத்தனை கோடி, அத்தனை கோடி என சமூக வலைத்தளங்களில் அந்தப் படத்திற்கு சம்பந்தமில்லாத யாரோ சிலர் பதிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால், முதல் முறையாக ஒரு படத்தின் வசூல் இவ்வளவு என்பதை அறிவிக்கப் போகிறார்கள். சிரஞ்சீவி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கைதி நம்பர் 150' படம் ஒரு வாரத்தைக் கடந்துவிட்டது. இன்று மாலை இந்தப் படத்தின் ஒரு வார வசூல் என்ன என்பதை படத்தின் தயாரிப்பாளரான ராம் சரண் அறிவிக்க உள்ளாராம்.

இந்தப் படம் தெலுங்குத் திரையுலகில் அதி வேகமாக 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல சென்டர்களில் 'பாகுபலி' படத்தின் வசூலையும் மிஞ்சியுள்ளதாம். தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற 'கத்தி' படத்தின் ரீமேக்கான 'கைதி நம்பர் 150' படம் தமிழில் வசூலித்ததை விட பல மடங்கு தெலுங்கில் வசூலித்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் சிரஞ்சீவி மட்டுமே என தெலுங்குத் திரையுலகினரும் கொண்டாடி வருகிறார்கள். தெலுங்குத் திரையுலகிற்கு இந்தப் படம் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.


0 comments:

Post a Comment