Wednesday, January 18, 2017

அமீர்கானுக்கு மாற்றாக மோகன்லால் வந்திருப்பார்..!


அமீர்கானுக்கு மாற்றாக மோகன்லால் வந்திருப்பார்..!



18 ஜன,2017 - 13:40 IST






எழுத்தின் அளவு:








சமீபத்தில் இந்தியில் ஆமிர்கான் நடித்த 'தங்கல்' என்கிற படம் வெளியானது.. நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப்படத்தில் மல்யுத்த வீரராக அமீர்கான் நடித்திருந்தார். மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு தன்னால் விருது எதுவும் பெற்றுத்தர முடியவில்லையே என்கிற விரக்தியில் இருக்கும் ஆமீர்கான், தனக்கு ஆண் வாரிசுகள் இல்லாத நிலையில் தனது பெண்ணை மல்யுத்த வீராங்கனையாக மாற்றி இந்தியாவுக்கு தங்க மெடல் வாங்கித்தர செய்கிறார்.. இதுதான் படத்தின் கதை.. இந்தப்படமும், படத்தில் நடித்த அமீர்கானின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

சமீபத்தில் இந்தப்படத்தின் தலைமை தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரான திவ்யாராவ் என்பவர் இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டது குறித்த தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது இந்தப்படத்தில் ஒருவேளை சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஆமீர்கான் நடிக்க முடியாமல் போயிருந்தால், தங்களது அடுத்த சாய்ஸ் ஆக இருந்தவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தான் என கூறியுள்ளார். மோகன்லாலும் இந்தப்படத்தில் இணைந்திருக்காவிட்டால் மூன்றாவது சாய்ஸ் அதாவது கடைசி சாய்ஸ் ஆக அவர்கள் கருதியது உலக நாயகன் கமல்ஹாசனைத்தான். ஆனால் ஆமீர்கானே ஒப்புக்கொண்டதால் மற்ற இருவரில் யாரோ ஒருவரின் மல்யுத்த அவதாரத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.


0 comments:

Post a Comment