Tuesday, January 17, 2017

விவசாயிகள் தற்கொலை பற்றிய படம் இயக்குவேன்: வெற்றிமாறன்


விவசாயிகள் தற்கொலை பற்றிய படம் இயக்குவேன்: வெற்றிமாறன்



17 ஜன,2017 - 15:20 IST






எழுத்தின் அளவு:








விசாரணை படத்திற்கு பிறகு தற்போது வெற்றி மாறன் வடசென்னை படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் விவசாயிகளின் தற்கொலை பற்றி படம் இயக்குகிறார். விவசாயிகள் தற்கொலை அதிமாகி வரும் இந்த நேரத்தில் வட சென்னையை தள்ளி வைத்து விட்டு விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுக்கலாமா என்றும் வெற்றிமாறன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டில்லியில் நடந்து வரும் ஒரு கருத்தரங்கில் பங்கேற்க சென்ற வெற்றிமாறன் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:

வட சென்னை படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வடசென்னைக்கு பிறகு விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறேன். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இது அந்த தற்கொலைகளுக்கு பின்னால் இருக்கிற அரசியலை பேசும் படம். ஒரு நாவலை தழுவித்தான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது தமிழ் கலாச்சரத்துக்கு எதிரானது. மிருங்கள் செய்ய முடியாத ஒன்றை மனிதனுக்காக செய்ய வைப்பதுதான் மிருகவதை. தீபாவளிக்கு பட்டாசு வெடித்து காற்றை மாசு படுத்துவதும், சிலைகளை நீரில் கரைத்து நீரை மாசுபடுத்துவதும் மிருகங்களுக்கு எதிரான செயல்தான் அதை தடை செய்ய முடியுமா? ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படும் என்று எதிர்பர்க்கிறேன். என்றார் வெற்றிமாறன்.


0 comments:

Post a Comment