காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்களும் சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இதனைத் தொடந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணையவிருந்தனர்.
ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடால்களால் அப்படம் கைவிடப்பட்டது.
பின்னர் சூர்யா வெளியிட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தனியார் டிவியின் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசும்போது…
எங்கள் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படம் செய்ய வேண்டும் என தோன்றும்.
பிரச்சினையான சமயத்தில் எங்கள் இருவருடைய கருத்துக்களும் வலுவாக இருந்தது.
எனவே அப்போது கௌதம் மேனனுடன் இணைய மறுத்துவிட்டேன்.
எனக்கு பிடிக்காமல் அறிக்கை ஒன்றை அப்போது வெளியிட்டு விட்டேன்.
பின்னர் அப்படி செய்திருக்கக் கூடாது என்றே தோன்றியது.
ஆனால் சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசினோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம்.” என்று பதிலளித்துள்ளார்.
0 comments:
Post a Comment