ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய படத்தில் தனுஷ்-சிவகார்த்திகேயன் நடிக்க, இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
இதனையடுத்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் பல படங்களில் அனிருத்தான் இசையமைத்தார்.
தனுஷ் அறிவிக்காவிட்டாலும் அனிருத் இசையமைப்பார் என்றே பரவலாக பேசப்பட்டது.
ஆனால் சமீபகாலமாக தனுஷாலும் அவரது உறவினர்களாலும் அனிருத் ஒதுக்கப்படுவது தெளிவாக தெரிகிறது.
தனுஷின் ‘கொடி’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.
தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ படத்தில் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இதனையடுத்து, சௌந்தர்யா ரஜினி இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2′ படத்திலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘மாரியப்பன்’ படத்திலும் ஷான் ரோல்டனே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்வதால், தனுஷ் – அனிருத் இடையிலான நட்பு இனி தொடருமா? என்பது கேள்விக்குறியே.
ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.
0 comments:
Post a Comment