
இந்நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ‘பைரவா’ வெளியாகும் நிலையில், பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’ படம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது, இந்த படமும் பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால், தற்போது பொங்கல் ரேசில் விஜய்யின் ‘பைரவா’ படமும், பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் மட்டுமே களமிறங்கியுள்ளது. இதில், ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் திட்டமிட்டபடி ரிலீசாகுமா? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் நிலவியுள்ளது.
இன்னும் இரண்டு தினங்கள் உள்ள நிலையில், இதுகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment