Wednesday, January 18, 2017

வில்லியாக நடிக்க ஆசைப்படும் காஜல் அகர்வால்


வில்லியாக நடிக்க ஆசைப்படும் காஜல் அகர்வால்



18 ஜன,2017 - 16:25 IST






எழுத்தின் அளவு:








தமிழ் ஹீரோக்கள் கண்டுகொள்ளாத காஜல் அகர்வாலை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி தனது மகதீரா படத்தின் வாயிலாக உலகம் அறியச் செய்தார். மகதீரா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னரே தமிழ் மற்றும் தெலுங்கில் காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இடையில் சிறிது காலம் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த காஜலுக்கு மீண்டும் தெலுங்கு திரை உலகம் உதவியுள்ளது. டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கைதி நம்பர் 150 படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களிடம் கலந்துரையாடிய காஜல் அகர்வால், வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடிப்பதே தனது கனவு என்று கூறியுள்ளார். தனுஷுடன் கொடி படத்தில் இணைந்து நடித்த த்ரிஷா வில்லத்தனமான வேடம் ஏற்று, பாராட்டு பெற்றார். அதே போல் காஜல் அகர்வாலும் வில்லி வேடங்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். விரைவில் காஜல் அகர்வாலை வில்லியாக பார்க்கலாம்.


0 comments:

Post a Comment