சல்மான் உடனான நட்பு - ஷாரூக் பதில்
18 ஜன,2017 - 17:34 IST
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை பிடித்து இருப்பவர் ஷாரூக்கான். தற்போது இவர் இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ள ‛ரயீஸ்' படத்தில் நடித்து இருக்கிறார். அடுத்தவாரம் படம் வெளியாக இருப்பதால் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறது ரயீஸ் படக்குழு. சமீபத்தில் நடந்த டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக்கானிடம், சல்மான் உடனான உங்களது உறவு பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ஷாரூக் கூறியதாவது...." சில விஷயங்களை பகிர முடியாது. அதேப்போல் எனக்கும், சல்மானுக்கும் இடையேயான நட்பு. சல்மானுடன் நிறைய பிரச்னைகள் இருந்தது உண்மை தான். ஆனால் அது நீங்கள் எழுதியது போன்று கிடையாது. மூன்றாவது நபர்களால் எங்களது நட்பை பற்றி புரிந்து கொள்ள முடியாது. ஒருக்கட்டத்தில் வதந்திகள் அதிகமாக வந்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். நாங்கள் குழந்தைகள் இல்லை. என்னையும், சல்மானையும் எதிரிகள் என்று அனைவரும் கருதும் போது மிகவும் கவலை அடைந்தேன். நாங்கள் எதிரிகள் இல்லை. இருவரும் அனைத்து விசயங்களையும் பகிர்ந்து கொள்வோம். ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருக்கிறோம்" என்றார்.
‛ரயீஸ்' படம் இந்த வாரம் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment