சல்மான் விடுதலை : தந்தை மகிழ்ச்சி
19 ஜன,2017 - 15:21 IST
மான் வேட்டையாடிய தொடர்பான வழக்கில் முறையின்றி ஆயுதம் வைத்திருந்த குற்றம் தொடர்பான வழக்கில் சல்மான் குற்றமற்றவர் என ஜோத்பூர் கோர்ட் நேற்று அவரை விடுதலை செய்தது. இதற்கு சல்மானின் தந்தை மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சல்மானின் தந்தை சலீம் கூறியிருப்பதாவது... ‛‛இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் சல்மானுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment