என் மகனுக்கு நல்ல நண்பனாக நான் இல்லை - ரிஷி கபூர்
19 ஜன,2017 - 15:02 IST
பாலிவுட்டின் மாஜி ஹீரோ ரிஷி கபூர். தற்போது இவர் மகன் ரன்பீர் கபூரும் பாலிவுட்டின் பிரபலமாக நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ரிஷி கபூர், தனது புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரிஷி கபூர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது... என்னைப் போன்று ஒரு தந்தையை ரன்பீர் கபூர் விரும்பமாட்டார். ஏனென்றால் அவர் சின்ன வயதாக இருக்கும்போது சினிமாவில் நான் பிஸியான நடிகராக வலம் வந்தேன். அதனால் ரன்பீர் முழுக்க முழுக்க அவரது தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார், அவரோடு நான் அதிகம் செலவிட முடியவில்லை. அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், ஆனால் நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. ரன்பீரும் ஒருநாள் தந்தையாக மாறும்போது, அவர் என்னை போன்ற அப்பாவாக இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இது தான் தலைமுறை இடைவெளி, நான் என் மகனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment