Thursday, January 19, 2017

அறப்போராட்டத்தை கைவிட்ட சிம்பு: காரணம் என்ன?


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், நடிகர் சிம்பு நேற்று தனது வீட்டின் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டத்தை தொடங்கினார். சிம்புவுடன், மகத், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், ‘ராஜதந்திரம்’ பட புகழ் வீரபாகு உட்பட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


நேற்று இரவு முழுவதும் சிம்பு மற்றும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் அனைவரும் அவரது வீட்டு வாசலிலேயே படுத்து உறங்கினர். இந்நிலையில், சிம்பு இந்த போராட்டத்தை தற்போது கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து விசாரிக்கையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மீடியாக்களின் கவனம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மெரீனாவில் இதற்காக போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீதுதான் இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் இந்த அறப்போராட்டத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.


இருப்பினும், ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு பின்னால் இருந்து அவர் முழு ஆதரவு கொடுக்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:

Post a Comment