தன்னடக்கமான நடிகர் ஷாரூக்கான் - நவாசுதீன் சித்திக்
18 ஜன,2017 - 17:37 IST
இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அடுத்தவாரம் வெளிவர இருக்கும் படம் ‛ரயீஸ்'. தற்போது இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் ஷாரூக்கான். அவருடன் இணைந்து நடிகர் நவாசுதீன் சித்திகிக்கும் புரொமோஷன் செய்து வருகிறார் . சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சித்திக் , ஷாரூக்கானை புகழ்ந்து பேசினார்.
சித்திக் பேசுகையில்...." ‛தலாஷ்' படத்தில் அமீர்கானுடனும், ‛ரயீஸ்' படத்தில் ஷாரூக்கானுடனும், கிக் மற்றும் பஜ்ரங்கி பைஜான் படத்தில் சல்மான்கானுடனும் இணைந்து நடித்திருக்கிறேன். மூன்று கான் நடிகர்களும் வித்தியாசமாக நடிக்கும் திறமை கொண்டவர்கள். அவர்களுடன் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. ஷாரூக்குடன் நடித்ததை பற்றி கூற வேண்டும் என்றால் அவருடன் நடித்த ஒவ்வொரு காட்சிகளும் ரசித்து நடித்தேன். படத்தில் எனக்கும், அவருக்கும் இடையே பல கடினமான காட்சிகள் உள்ளது. தான் ஒரு பெரிய ஸ்டார் நடிகர் என்று ஷாரூக் தன்னை காட்டிக் கொண்டது இல்லை, மிகவும் தன்னடக்கமான நடிகர் என்று புகழ்ந்து பேசினார்.
‛ரயீஸ்' படம் இந்த வாரம் 25-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment