லிங்குசாமியின் பள்ளியில் டைரக்சன் படித்தேன்! கடுகு பரத் சீனி
22 ஜன,2017 - 09:06 IST
கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். தற்போது கடுகு படத்தை இயக்கியிருக்கிறார். பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்மில்டனின் தம்பி பரத் சீனியும் நடித்திருக்கிறார். அதோடு, பரத், ராஜகுமார னுக்கு இணையாக இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் அவர் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் அதுகுறித்து பரத்சீனியைக் கேட்டபோது, கடுகு படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருக்கிறேன். அந்த வேடத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றபோதுதான் நான் நடித்தேன். மேலும், சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதைவிட படம் இயக்க வேண்டும் என்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. காரணம் நான் இயக்குனர் லிங்குசாமியிடத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். என்னதான் எனது அண்ணன் இயக்குனர் என்றபோதும் நான் அவர் பாணியில் படம் இயக்க மாட்டேன்.
நான் லிங்குசாமியின் பள்ளியில் டைரக்சன் படித்தவன் என்பதால் அவர் பாணியில் கமர்சியல் படங்களை, என்னை கவர்ந்த இயக்குனரான கெளதம் மேனன் பாணியில் ஸ்டைலிசாக இயக்குவேன். அப்படி நான் இயக்கும் படம் அனை வருக்கும் பிடித்தமான இளைஞர்களுக்கான படமாக இருக்கும். கடுகு படம் திரைக்கு வந்ததும் நான் இயக்கும் படவேலைகளை தொடங்குவேன். அந்த படத்தில் ஒரு முன்னணி நடிகர் ஹீரோவாக நடிப்பார் என்கிறார் பரத்சீனி.
0 comments:
Post a Comment