துருவநட்சத்திரம் டீசரை அமெரிக்காவில் படமாக்கிய கெளதம்மேனன்!
19 ஜன,2017 - 12:38 IST
சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் வெளியாவதற்கு முன்பே, தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டாவை ஆரம்பித்து விட்டார் கெளதம்மேனன். அதேபோல் இப்போது என்னை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வருவதற்கு முன்பே விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம் பட வேலை களை தொடங்கி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு குன்னூரில் தொடங்கயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இரண்டு முறை படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டும் படப்பிடிப்பு நடக்கவில்லையாம்.
இந்நிலையில், விக்ரமுடன் அமெரிக்கா சென்ற கெளதம்மேனன் அங்கு சில வாரங்கள் முகாமிட்டு துருவ நட்சத்திரம் டீசரை படமாக்கியிருக்கிறார். ஆக, இதுவரை துருவநட்சத்திரம் படத்தின் டீசர் தவிர மற்ற படப்பிடிப்புகள் நடக்கவில்லையாம். மேலும், அப்படத்தின் அதிகபட்ச படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் அமெரிக்காவிலேயே நடைபெறயிருப்பதால், மொத்த பைனான்சும் தயாரான பிறகுதான் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம் கெளதம் மேனன்.
0 comments:
Post a Comment