Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு எதிரொலி : 'சி 3' - சுற்றுவதை நிறுத்திய சூர்யா


ஜல்லிக்கட்டு எதிரொலி : 'சி 3' - சுற்றுவதை நிறுத்திய சூர்யா



19 ஜன,2017 - 10:47 IST






எழுத்தின் அளவு:








ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தன்மை என்ன என்று தெரியாமல் அறிக்கை மட்டும் விடுத்தால் போதும் என நினைத்து நேற்றுமுன்தினம் காலை போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சூர்யா. ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டுவிட்டு மறுபக்கம் அடுத்த வாரம் வெளிவர உள்ள தன்னுடைய 'சி 3' படத்தினை விளம்பரப்படுத்த ஊர் ஊராகச் செல்லும் திட்டம் ஒன்றைத் தயாரித்தார். அதன்படி நேற்றுமுன்தினம் காலை கோயம்புத்தூரில் உள்ள தியேட்டர்களில் தன்னுடைய 'சி 3' படம் பற்றி பேசிவிட்டு, போகிற போக்கில் கூடவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பேசினார்.

இது பற்றிய செய்தி ஒன்றை நாமும் நேற்று காலை வெளியிட்டிருந்தோம். மக்களின் போராட்டத்திற்கு கூடும் கூட்டம் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தியேட்டர்கள் பக்கம் தன்னைப் பார்க்க ரசிகர்களை அவர் கூட்டுவது சரியல்ல என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

தொடர்ந்து சூர்யா மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 'சி 3' படத்திற்காக செல்வது சரியாக இருக்காது என்பதை தாமதமாக உணர்ந்த சூர்யா, ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டார்.

சி 3 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரை, திருநெல்வேலிக்கான 'சி 3' பிரமோஷன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்கிறோம் என அறிவித்துள்ளார்கள்.


0 comments:

Post a Comment