Thursday, January 19, 2017

'பீட்டா'வில் இல்லை... நடிகர்கள் அலறல்...


'பீட்டா'வில் இல்லை... நடிகர்கள் அலறல்...



19 ஜன,2017 - 13:53 IST






எழுத்தின் அளவு:








தமிழ்நாட்டில் 'ஜல்லிக்கட்டு' போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் 'பீட்டா' அமைப்பில் நாங்கள் இல்லை, இல்லவே இல்லை என பல நடிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருககிறார்கள். இதற்கு முன் பீட்டா ஆதரவுடன் போராட்டம் நடத்தியதாக, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்ததாக சில நடிகர்கள் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தொடர்ந்து அவர்களை போராட்டக் குழுவினர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தனுஷ், விஷால், ஆர்யா, நாசர், மம்முட்டி, இயக்குனர் ஷங்கர், எமி ஜாக்சன், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என வாட்ஸ்-அப்பில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரச்சனை ஆரம்பமான நாளிலிருந்தே விஷால், ஆர்யா இருவரும் எந்தக் காரணத்திலும் ஜல்லிக்கட்டை எதிர்த்ததில்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். த்ரிஷா பீட்டா அமைப்பை விட்டு விலகிவிட்டதாகச் சொன்னார். எமி ஜாக்சன் இன்னும் இது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த்துடன் 2.0 படத்தில் நடித்து முடித்துள்ளார் எமி ஜாக்சன்.

நாசர், மம்முட்டி, இயக்குனர் ஷங்கர், கீர்த்தி சுரேஷ், தனுஷ் ஆகியோர் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக இருந்தார்களா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

வாட்ஸ்-அப்பில் பகிரப்படும் ஒவ்வொரு தகவல்களும் விறுவிறுவென போராட்டக்காரர்களிடையே பரவி வருகிறது. இதனால், நடிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். 'நாங்கள் பீட்டாவுக்கு ஆதரவாக செயல்படவில்லை' என தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

நாளை நடிகர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் போராட்டத்தில் யார் யார் கலந்து கொள்ளவில்லையோ அவர்கள் மீது போராட்டக்காரர்களின் கோபம் திரும்பவும் வாய்ப்புள்ளது.


0 comments:

Post a Comment