Monday, January 2, 2017

போதை பழக்கத்திற்கு அடிமையாக நடிக்கவுள்ள நடிகை கீர்த்திசுரேஷ்



போதை பழக்கத்திற்கு அடிமையாக நடிக்கவுள்ள நடிகை கீர்த்திசுரேஷ்








நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷூம், சமந்தாவும் நடிக்க உள்ளனர். இதில் யார் சாவித்ரியாக நடிக்க போகிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தவாரம் வெளியாக உள்ளது.


தமிழ் சினிமா கண்ட முக்கியமான நடிகைகளில் சாவித்ரியும் ஒருவர். நடிகையர் திலகமான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். முதன்முலில் விலையுர்ந்த கார், பங்களா கட்டியவர், அதிக சம்பளம் வாங்கியவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர். இவ்வளவு சிறப்புகள் இருந்தும் இவரது கடைசிகால வாழ்க்கை மிகவும் சோகமானது.


போதை பழக்கத்திற்கு அடிமையாக எந்த ஆதரவுமின்றி ஒரு அநாதை போல் இறந்து போனார். இவரது வாழ்க்கை வரலாறு இப்போது சினிமாவாக உருவாக உள்ளது. தெலுங்கு இயக்குநர் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ள இப்படத்திற்கு ‛மகாநதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


சாவித்ரியாக நடிக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. நித்யா மேனன், சமந்தா, வித்யாபாலன் என பட்டியல் நீண்டது. இப்போது அந்த பட்டியலில் கீர்த்தி சுரேஷூம் இடம் பிடித்திருக்கிறார். ஆம்,  போதைப்பழக்கத்தால் வாழ்கையை இழந்த நடிகை சாவித்ரி வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்க உள்ளாராம். கூடவே நடிகை சமந்தாவும் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். இதில் யார் சாவித்ரியாக நடிக்க போகிறார்கள் என்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தவாரம் வெளியாக இருக்கிறது.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment