Monday, January 23, 2017

ரீ-என்ட்ரி சூப்பர் - வேண்டுதல் நிறைவேற்றிய சிரஞ்சீவி


ரீ-என்ட்ரி சூப்பர் - வேண்டுதல் நிறைவேற்றிய சிரஞ்சீவி



23 ஜன,2017 - 16:19 IST






எழுத்தின் அளவு:








டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹிட்டான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இயக்குனர் விவி விநாயக் இயக்கி கைதி நம்பர் 150 படம் வசூலிலும் லாபம் பார்த்து வருகின்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது நடிப்பில் திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால்,சிரஞ்சீவி தனது மனைவி, மகள் மற்றும் மருகனுடன் சித்தூரில் உள்ள ஸ்ரீகாளகஸ்தி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை மற்றும் பிரார்தனை செய்துள்ளார். சிரஞ்சீவியைக் காண ரசிகர் கூட்டம் கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. காவலர்கள் உதவியுடன் சிரஞ்சீவி சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பி சென்றார்.


0 comments:

Post a Comment