நான்கடி உயர மனிதனாக நடிக்கும் மம்முட்டி..!
23 ஜன,2017 - 10:07 IST
தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த மலையாள இயக்குனர் நாதிர்ஷா அடுத்ததாக மலையாள மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டியின் கெட்டப்பில் புது ஆச்சர்யத்தை ஏற்படுத்த இருக்கிறார்கள். இதுநாள்வரை தனது கெட்டப்புகளை விதம் விதமாக மாற்றி நடித்திருக்கிறார் என்றாலும் அவையெல்லாம் வெறும் மேக்கப்பினாலும், உடையினாலும் என்கிற அளவில் மட்டுமே இருந்து வந்தன. ஆனால் இந்த புதிய படத்தில் நான்கடி உயர மனிதனாக மம்முட்டி நடிக்க இருக்கிறாராம்.
ஆனால் அது படம் முழுவதிலுமா இல்லை கொஞ்ச நேரமே வரும் காட்சிகளா, அதுவும் இல்லையென்றால் அபூர்வ சகோதர்கள் கமல் மாதிரி ஒருவர் உயரம், ஒருவர் குள்ளம் என டபுள் ஆக்சனா என்பதெல்லாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்கள்.. நான்கடி னுயர மம்முட்டியின் கட்சிகளை கிராபிக்சில் உருவாக்க இருக்கிறார்களாம். இந்தப்படத்தின் கதாசிரியர் பென்னி நாரயம்பலம்.. இவர் ஏற்கனவே கூன் விழுந்த மனிதனின் கதையாக 'குஞ்சுக்கூனன்' (தமிழில் பேரழகன்) மற்றும் பெண் தன்மை கொண்ட ஆணின் கதையாக 'சாந்துப்பொட்டு' என வித்தியாசமான கேரக்டர்களை மையப்படுத்தி கதை எழுதியவர்.. அதனால் மம்முட்டியை நான்கடி உயர மனிதனாக காட்டுவதற்கும் நிச்சயம் ஏதாவது வலுவான கதையை உருவாக்கி இருப்பார் என தாராளமாக நம்பலாம்.
0 comments:
Post a Comment