விஜய், சூர்யா படங்களில் நடிக்கிறேன்! -சத்யன்
23 ஜன,2017 - 09:37 IST
சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் காமெடியனானவர் சத்யன். சமீபகாலமாக நிறைய படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. இதுபற்றி சத்யனிடம் கேட்டபோது, என்னைப்பொறுத்தவரை நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. குறைவான படங்களென்றாலும், பெரிய படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அதோடு நடிக்கிற படங்கள் குறித்த நேரத்தில் திரைக்கு வந்து விட வேண்டும் என்றும் நினைக்கிறேன்.
காரணம், சமீபகாலமாக சிறிய படங்களில் நடித்தால் அதில் பல படங்கள் திரைக்கே வருவதில்லை. இதனால் நம்முடைய உழைப்பு வீணாகி விடுகிறது. அதனால்தான் இப்போது சின்ன படங்களை நான் ஏற்பதே இல்லை. இந்நிலையில், தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் படம் முழுக்க சூர்யாவுடன் வரும் காமெடியனாக நடிக்கிறேன். அதையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்திலும் விஜய்யின் நண்பனாக நடிக்கிறேன்.
அந்த வகையில், தற்போது என் கைவசம் விஜய், சூர்யா படங்கள் மட்டுமே உள்ளது. இந்த மாதிரி பெரிய நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன். அதேபோல் பெரிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது என்கிறார் சத்யன்.
0 comments:
Post a Comment