கடுகு படத்தில் 2 பாடல்களை இணைத்த விஜய்மில்டன்!
23 ஜன,2017 - 08:46 IST
கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அதையடுத்து தற்போது தாமிரா இயக்கி வரும் ஆண்தேவதை படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதற்கிடையே அவர், பரத், இராஜ குமாரனை வைத்து இயக்கியுள்ள கடுகு படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படம் தணிக்கைக் குழுவுக்கு திரையிடப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அதையடுத்து சரியான நேரத்தில் படம் வெளியிடப்பட உள்ளதாம்.
மேலும், இந்த கடுகு படத்தை பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல்தான் வெளியிட திட்டமிட்டிருந்தார் விஜய் மில்டன். ஆனால், காட்சிகளின் பின்னணி எபெக்ட்ஸ் மட்டுமே இடம்பெற்றபோது, கமர்சியல்ரீதியாக பாதிக்கும் என்று நினைத்தாராம். அதனால் இப்போது அப்படத்திற்கு பின்னணி இசை கொடுத்திருப்பதோடு, இரண்டு கதை சூழல்களுக்கான பாடல்களையும் உருவாக்கி அவற்றையும் படமாக்கியிருக்கிறாராம். விரைவில் அந்த பாடல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளதாம். ஆக, கடுகு படம் தற்போது பக்கா கமர்சியல் படமாகி விட்டதாம்.
Advertisement
0 comments:
Post a Comment