Monday, January 16, 2017

சமுத்திரகனியை நண்பராக ரொம்ப பிடிக்கும்! -டைரக்டர் தாமிரா


சமுத்திரகனியை நண்பராக ரொம்ப பிடிக்கும்! -டைரக்டர் தாமிரா



17 ஜன,2017 - 08:26 IST






எழுத்தின் அளவு:








கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகிய இரண்டு மாபெரும் இயக்குனர்களை வைத்து ரெட்டைச்சுழி என்ற படத்தை இயக்கியவர் தாமிரா. அதையடுத்து தற்போது சமுத்திரகனி என்ற இயக்குனரை நாயகனாக வைத்து ஆண் தேவதை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜோக்கர் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, ப்ரஜன் உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை யமைக்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் தாமிராவிடம், சமுத்திரகனியை உங்களுக்கு நடிகராக பிடிக்குமா? இயக்குனராக பிடிக்குமா? என்று கேட்டால், அண்ணி என்ற எனது சீரியல் கதையை இயக்கியவர் சமுத்திரகனி. அப்போதில் இருந்தே அவர் எனது நல்ல நண்பர். ஒரு நண்பராக அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதன்பிறகுதான் இயக்குனர் நடிகரெல்லாம். மேலும், எனது கதையை முன்பு இயக்கிய சமுத்திரகனியே இப்போது எனது கதையில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில், என்னுடைய ஆண்தேவதை படத்தில் என் நண்பர் சமுத்திரகனி மிகச்சிறப்பாக நடித்து வருகிறார் என்கிறார் தாமிரா.


0 comments:

Post a Comment