வேறு வழியில்லாமல் ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்தேன் – பிரபல நடிகை பகீர்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கேங்கஸ்டர் பட வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் அவர் ஆபாச படத்தில் நடித்திருந்திருப்பாராம். இவர் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர்.
பாலிவுட்டில் நடிப்பால் மிரட்டுபவர் கங்கனா ரனாவத். அவர் கேங்ஸ்டர் படம் மூலம் நடிகையானார். அந்த படத்திற்கு மட்டும் அவர் 5 விருதுகள் பெற்றார். 29 வயதில் 3 தேசிய விருதுகளை பெற்றவர்.
இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் பற்றி கூறுகையில்,கேங்ஸ்டர் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்பு எனக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது நல்ல படம் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் நடிக்கலாம் என்று இருந்தேன்.போட்டோஷூட்டும் நடத்தினார்கள். அங்கமெல்லாம் தெரியும்படி ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார்கள். அது நீலப்படம் போன்று இருந்தது.
இது சரியில்லை என்று நினைத்தேன்.நீலப் படத்தில் கிட்டத்தட்ட நடிக்கவிருந்த நேரத்தில் தான் கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நீலப்படத்தில் நடிக்க மறுத்தேன். அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் என் மீது கோபப்பட்டார்.கேங்ஸ்டர் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தால் நீலப்படத்தில் நடித்திருந்திருப்பேன். நான் என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பவள் என்று கங்கனா ரனாவத் தெரிவித்தார்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment