Thursday, January 12, 2017

ஜல்லிக்கட்டு : கிரண் பேடிக்கு மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி


ஜல்லிக்கட்டு : கிரண் பேடிக்கு மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி



12 ஜன,2017 - 15:07 IST






எழுத்தின் அளவு:








தமிழகம் முழுக்க ஒரு அனல் பறக்கும் யுத்தம் போய் கொண்டிருக்கிறது என்றால் அது ஜல்லிக்கட்டு தான். அரசியல் கட்சியினர், சினிமா கலைஞர்கள், மாணவர்கள்... என அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இந்தியா டுடே பத்திரிகையின் மாநாடு நடந்து வருகிறது. இதில் ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் நடந்தது. இதில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடி, நடிகைகள் சுஹாசினி, குஷ்பு, நடிகர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய கிரண் பேடி, ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் சித்தரவதை செய்யப்படுகிறது, அதனால் சுப்ரீம் கோர்ட் தடை செய்தது சரி என்று தரப்பு விவாதத்தை முன் வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஆர்ஜே பாலாஜி, குஜராத் சென்றிருந்தேன் அங்கே ஓட்டங்கள் மீது கடும் சுமை கொண்ட மூட்டைகள் சுமக்க வைக்கப்படுகின்றது, அது சித்தரவதை இல்லையா.?, அதை தடை செய்ய முடியுமா என்றார். இதற்கு கிரண் பேடி, கோர்ட் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றார். உடனே குறுக்கிட்ட பாலாஜி, சரி நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். தமிழகத்திற்கு தண்ணீர் தர சொல்லி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது, ஆனால் ஒரு மாநிலம் கோர்ட் உத்தரவை ஏற்க மறுக்கிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்றார். தொடர்ந்து பேசிய பாலாஜி, நீங்க காலில் போட்டிருக்கும் செருப்பு லெதர், எதில் இருந்து வந்தது? மாட்டை அறுத்து அதன் தோளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள். அது சித்தரவதை இல்லையா... என்றார்.


0 comments:

Post a Comment