ஒரு பாட்டிக்கு எதிராக போராடுவதா?-சதீஷ் டுவிட்
23 ஜன,2017 - 09:33 IST
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்க வேண்டும் என்று தமிழகம் மட்டுமின்றி, உலகத்தில் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை மெரினா பீச், அலங்கா நல்லூர் பகுதிகளில் பெருந்திரளாக இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பெண்களும், குழந்தைகளும்கூட அமைதியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை உலகமே வியப்பில் உற்று நோக்கி வருகிறது.
இந்த நிலையில், பீட்டா அமைப்பில் இடம்பெற்றிருக்கும் ராதாராஜன் என்ற பெண்மணி, இந்த அறவழிப் போராட்டத்தை, ப்ரீ செக்ஸ் -என்ற வார்த்தையை முன்வைத்து கொச்சைப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்து அனைவருமே கொதித்தெழுந்தனர். அதோடு ஆண்களும், பெண்களும் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். அதையடுத்து அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், காமெடியன் சதீஷ், பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிராக போராட வைத்து விட்டீர்களே. ராதாராஜன் தவறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment