Wednesday, January 11, 2017

கலாய்த்தவர்களுக்கு கருத்து சொன்ன லட்சுமிராமகிருஷ்ணன்!


கலாய்த்தவர்களுக்கு கருத்து சொன்ன லட்சுமிராமகிருஷ்ணன்!



12 ஜன,2017 - 09:03 IST






எழுத்தின் அளவு:








ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். குறிப்பாக, அந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் கலாய்க்கத் தொடங்கியதோடு, பல படங்களிலும் கலாய்த்தனர். அதோடு நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா உள்ளிட்ட சிலரும் விமர்சித்தனர். ஆக, இந்த கலாய்ப்பு மற்றும் விமர் சனங்களே லட்சுமிராமகிருஷ்ணனை பெரிய அளவில் பிரபலப்படுத்தி விட்டது.

ஆனால், தன்னை கலாய்த்தவர்களால் அடிக்கடி டென்சனான லட்சுமிராமகிருஷ்ணன் அவர்களுக்கு தனது சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்தும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தன்னை கிண்டல் செய்ததற்கு ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜிக்கு

எதிராக குரல் கொடுத்த லட்சுமிராமகிருஷ்ணன், இப்போது தனது டுவிட்டரில் ஸ்ரீபிரியா, ஆர்.ஜே.பாலாஜிக்காக மேலும் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார். அதில், எதையும் தப்பான கண்ணோட்டத்துடன் மட்டும் பார்ப்பவர்களுக்கு கோயிலில் உள்ள சிலைகள் கூட தவறாகத்தான் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்சுமிராமகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தமாதிரியான ரியாக்சன் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


0 comments:

Post a Comment