Monday, April 3, 2017

தனுஷ் போலி கையெழுத்து போட்டாரா..?









தனுஷ் போலி கையெழுத்து போட்டாரா..?



03 ஏப்,2017 - 18:22 IST






எழுத்தின் அளவு:








தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், மீனா தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விலக்கு அளிக்க கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவருக்கு அங்க அடையாளங்கள் உள்ளிட்டவைகளை சரிபார்க்கும் பணி நடந்தது. இதில், தனுஷ், தனது அங்க அடையாளங்களை மாற்றியிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இருந்த தனுஷ் கையெழுத்து போலியானது. மனுவின் நகலை தங்களுக்கு தர வேண்டும் என மேலுார் தம்பதியினரின் வழக்கறிஞர் டைட்டஸ், நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.




Advertisement








விஷால் அணி வெற்றியும், எதிர் அணிகளின் தோல்வியும்விஷால் அணி வெற்றியும், எதிர் ... மன்றம் ஆரம்பிக்கும் லவ்வர் மன்றம் ஆரம்பிக்கும் லவ்வர்










0 comments:

Post a Comment