Monday, April 3, 2017

என்னை தேர்வு செய்ததற்கான நம்பிக்கை வீண் போகாது - விஷால்


என்னை தேர்வு செய்ததற்கான நம்பிக்கை வீண் போகாது - விஷால்



03 ஏப்,2017 - 15:42 IST






எழுத்தின் அளவு:








நடந்து முடிந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெற்றது. தலைவராக விஷால் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகை தந்தனர். விஷால் உள்ளிட்ட அனைவருக்கும் மேள - தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‛‛என்னை தேர்வு செய்ததற்கான நம்பிக்கை வீண் போகாது, தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் பிரச்னைகளை தாராளமாக கொண்டு வரலாம், உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். அனைவரும் ஒன்றாக இணைந்து தயாரிப்பாளர்களின் நலனுக்கு பாடுபடுவோம். நேற்று இரவே எங்களது பணியை தொடங்கிவிட்டோம். தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தும். இனி எந்த ஒரு புதிய படத்திற்கும் திருட்டு விசிடி அனுமதிக்கப்படாது. வருகிற வியாழக்கிழமை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்'' என்றார்.


0 comments:

Post a Comment