Friday, November 4, 2016

பேய் படங்களுக்கு இசையமைக்க பயப்படும் அனிருத்


201611041743249141_anirudh-scary-for-music-in-horror-film_secvpf‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி இருக்கும் படம் ‘ரம்’. இதில் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன், விவேக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.


விழாவில் பேசிய விவேக், ‘ரம்’ திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்தது. என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது. நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது எளிதான காரியம் அல்ல. ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிருத். இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்துதான் அனிருத் என்றார்.


அனிருத் பேசும்போது, பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம். அது மட்டுமல்ல-13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு பயம் தான். ஆனால் இப்போது நான் இசையமைத்திருக்கும் ‘ரம்‘, என்னுடைய 13 ஆவது படம். அதுவும் பேய் படம் என்று பயத்துடனே கூறினார்.


நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா, இயக்குனர் சாய்பரத், ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment