Thursday, November 3, 2016

தரணி இயக்கத்தில் மீண்டும் விக்ரம்!


தரணி இயக்கத்தில் மீண்டும் விக்ரம்!



04 நவ,2016 - 09:25 IST






எழுத்தின் அளவு:








விக்ரம் நடித்த தில், தூள், விஜய் நடித்த கில்லி, குருவி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தரணி. 2011ல் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தை இயக்கிய பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை. அதையடுத்து சில கதைகளை ரெடி பண்ணி விட்டு முன்னணி ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வந்த அவர், இப்போது விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை இயக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை விக்ரம் நடிப்பில் திரு இயக்கயிருந்த கருடா படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனம் ஏற்கனவே கரிகாலன் என்ற படத்திற்காக விக்ரமிடம் கால்சீட் வாங்கியிருந்தது. 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், அந்த படம் நிறுத்தப்பட்டது.

அந்த கால்சீட்டைதான் கருடா படத்திற்கு பயன்படுத்தயிருந்தனர். ஆனால் படப்பிடிப்பு தொடங்கயிருந்த நேரத்தில் டைரக்டர் திரு விலகியதால், இப்போது விக்ரமிடம் வாங்கி கால்சீட்டை வைத்து இப்போது இந்த படத்தை தயாரிக்கிறார்களாம். இந்த படம் சம்பந்தமாக சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் உள்ளிட்ட சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில், தரணி சொன்ன ஆக்சன் கதை ஓகேவாகியுள்ளதாம். மகன் துருவ் அமெரிக்காவில் படித்து வருவதால் கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் முகாமிட்டிருந்த விக்ரம், சென்னை திரும்பியதும் தரணியிடம் புதிய படம் குறித்த கதை கேட்பார் என்கிறார்கள்.


0 comments:

Post a Comment