Friday, November 4, 2016

விஜய்ஆண்டனியின் ஒரு வார்த்தைக்காகதான் விழாவுக்கு வந்தேன் -டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன்


விஜய்ஆண்டனியின் ஒரு வார்த்தைக்காகதான் விழாவுக்கு வந்தேன் -டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன்



04 நவ,2016 - 10:25 IST






எழுத்தின் அளவு:








பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய்ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் சைத்தான். இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் ஆடியோ விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு, விஜய் ஆண்டனியை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, விஜய் ஆண்டனி நான் சுக்ரன் என்ற படத்தை இயக்கயிருந்தபோது இசையமைப்பாளரான என்னிடம் வந்தார். அப்போது அவர் பெயர் அக்னி. அந்த பெயரைக்கேட்டதும், அக்னி என்றால் நெருப்பாச்சே என்று சொல்லி, உங்களது நிஜப்பெயரே இதுதானா என்று கேட்டேன். அதற்கு நிஜப் பெயர் விஜய் ஆண்டனி என்றார். இதுவே ரொம்ப நல்ல பெயராச்சே. விஜய் என்றால் வெற்றி, ஆண்டனி என்றால் அந்தோனியார். இவ்வளவு நல்ல பெயரை விட்டுவிட்டு எதற்காக அக்னி என்று வைக்க வேண்டும். இந்த பெயரை மாற்றி விடுங்கள் எ ன்றேன். அதற்கு உடனே ஓகே சொன்னார் விஜய் ஆண்டனி.

அப்படி விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் வேகமாக வளர்ந்து விடடார். அதோடு ஹீரோவாகவும் இப்போது நடித்து வெற்றி பெற்று வருகிறார். ஆனால் அவர், நான் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கயிருந்தபோது, என்னிடம் வந்து சொன்னார். அதோடு நான் கண்டிப்பாக வெற்றி பெறு வேன் என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரது அந்த தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. அதேபோல் அவர் நடிகராகவும் வெற்றி பெற்று விட்டார். தன்னுடைய மைனஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற கதைகளாக செலக்ட் பண்ணி நடிக்கிறார்.

மேலும், நான் கடந்த 3 மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறேன். அதனால் இந்த விழாவுக்கு என்னை வருமாறு விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கேட்டபோது, என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால் அதையடுத்து விஜய் ஆண்டனி போன் செய்து விழாவுக்கு கண்டிப்பாக வருமாறு அழைத்தார். அப்போது, நீங்கள் வந்தால் நான் சந்தோசப்படுவேன் என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன். என்னால் ஒருவருக்கு சந்தோசம் கொடுக்க முடிகிறதே என்று நினைக்கையில் எனக்கும் சந்தோசமாக இருக்கிறது.

அதோடு, விஜய் ஆண்டனி நடிக்கும் கதைகள் எதிர்மறையாக இருந்தபோதும் அவர் பாசிட்டிவானவர். அவர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி அடுத்து இந்திக்கும் செல்லப்போகிறார் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. அந்த வகையில், என் மகன் விஜய்யின் வெற்றியைப்பார்த்து எப்படி நான் சந்தோசப்படுகிறேனோ அதேபோல் விஜய் ஆண்டனியின் வெற்றியைப்பார்த்தும் சந்தோசப்படு கிறேன் என்றார்.


0 comments:

Post a Comment