தாய்லாந்து நாட்டு யானைகளுடன் மோதும் ஆர்யா
04 நவ,2016 - 10:20 IST
தமிழ் சினிமாவில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த பல படங்களில் யானைகள் நடித் துள்ளன. எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம், ரஜினி நடித்த தாய் மீது சத்தியம் போன்ற யானை முக்கிய வேடங்களில் நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றன. அதேபோல், பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த கும்கி படமும் வெற்றி பெற்றது. இப்படி பல யானை நடித்த படங்கள் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து இப்போது ஆர்யாவும் கடம்பன் படத்தில் யானைகளுடன் நடித்துள்ளார்.
மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யாவுடன் கேத்ரின் தெரசா நடித்துள்ளார். இந்த படத்தில் காட்டுவாசியாக நடிப்ப தற்கு முன்பிருந்தே மாதக்கணக்கில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து வந்த ஆர்யா, ஒருகட்டத்தில் 90 கிலோ எடை கொண்ட உடல்கட்டுக்கு மாறினார். அதையடுத்து கடம்பனில் நடிக்கத் தொடங்கியர் பல மாதங்களாக தாய்லாந்து நாட்டு காடுகளில் நடித்து வந்தார். அதோடு பல காட்சிகளில் யானைகளுடனும் நடித்தார்.
தற்போது கடம்பன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி விட்ட நிலையில், க்ளைமாக்ஸ் காட்சியை இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிராத வகையில் பிரமாண்டமாக படமாக்கி வருகிறார் ராகவன். அந்த வகையில், இந்த படத்தில் யானைகளின் மீது சவாரி செய்தபடி பல காட்சிகளில் நடித்துள்ள ஆர்யா, கிளை மாக்சில் 100 யானைகளுடன் மோதும் ஒரு சண்டை காட்சியிலும் நடிக்கிறாராம். தற்போது அந்த காட்சிதான் தாய்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
0 comments:
Post a Comment