கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், டான்ஸர் சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா.
ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.
வருகிற நவம்பர் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இதே நாளில் ராஜேஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படமும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.
இதனால் இரு படங்கள் இடையே மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சற்றுமுன் படத்திற்கு யு சர்ட்டிபிகேட் பெற்றுள்ள நிலையில் நவம்பர் 10ஆம் தேதி இந்த KIK படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment