விஜய்க்கு வைரமுத்து எழுதிய அறிமுக பாடல்
04 நவ,2016 - 15:39 IST
பாடலாசிரியர் வைரமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எழுதிய அறிமுக பாடல் (ஓப்பனிங் சாங்) அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. அந்த வரிசையில் பைரவா படத்தில் வைரமுத்து விஜய்க்கு ஒரு அறிமுக பாடல் எழுதியுள்ளார். விஜய் நடிக்கும் பைரவ£ படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பாடல்கள் வருகிற டிசம்பார் மாதம் வெளிவருகிறது.
விஜய்க்கு வைரமுத்து எழுதியுள்ள அறிமுக பாடல் பணத்தை கணக்கில் காட்டாமல் கருப்பு பணமாக பதுக்கி வைக்காதீர்கள், அந்த பணத்தை நாட்டுக்கு செலவு செய்யுங்கள் என்பதுதான் பாடல் வலியுறுத்தும் கருத்து. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் படத்தின் கதையும் கருப்பு பணத்தை மையமாக கொண்டதாக இருக்கலாம் என்பது. அந்த பாடல் இது...
பட்டைய கிளப்பு பட்டைய கிளப்பு
பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு
குட்டைய குழப்பு குட்டைய குழப்பு
குரவ மீன புடிக்க குட்டைய குழப்பு
கட்டு கட்டா சேத்த நோட்டுக்கட்டு&பெரும்
பூட்டுப்போட்டு கெடக்கு?
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல&அது
பட்டினியா கெடக்கு?
சேத்த சக்கரை உடம்பை கெடுக்கும்
சேத்த பணமும் உசுரைக் குறைக்கும்
பார்த்து பார்த்து செலவழிக்கணுமே
வெள்ள நிலவு தரைக்கு வருது
வெள்ளிக்கிரகம் வெலைக்கு வருது
காசை வீசி கணக்கு பண்ணணுமே...
காசை எடு காத்தும் திசைமாற்றும்
காசை எடு கடலில் ரெயில்போகும்
காசை எடு இமயம் கொஞ்சம் குனியும்
காசை எடு பூட்டி வச்சு என்ன பண்ணப்போற
அள்ளிக்கொடு இல்ல... ஆட்டம்போடு
சிங்கம் எல்லாம் சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு.
0 comments:
Post a Comment