Friday, November 4, 2016

வயிற்றுவலியோடு வந்தப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்த டாக்டர் கைது














உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா பகுதியை சேர்ந்த ஒருபெண் சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக இதேபகுதியை சேர்ந்த ஒரு டாக்டரிடம் சென்றார்.


அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர், அவரிடம் ஒருவகையான களிம்பை கொடுத்து, ஒதுக்குப்புறமாக உள்ள பக்கத்து அறைக்கு சென்று வயிற்றில் களிம்பை தடவுமாறு கூறினார்.



பக்கத்து அறைக்கு சென்று ஆடைகளை தளர்த்திவிட்டு, அடிவயிற்றுப் பகுதியில் களிம்பை தடவும்போது அந்த அறையின் கூரைபகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமராவை கண்ட அந்தப் பெண் திடுக்கிட்டார்.


அந்த செல்போனுடன் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர், இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நோயாளியின் அந்தரங்கத்தை ஆபாசமான முறையில் படம்பிடித்த குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Doctor detained for making indecent clips of patient


 



Comment Your Thoughts!








0 comments:

Post a Comment