Monday, January 9, 2017

கைதி நம்பர் 150 படத்தில் அல்லு அர்ஜூன்


கைதி நம்பர் 150 படத்தில் அல்லு அர்ஜூன்



10 ஜன,2017 - 09:41 IST






எழுத்தின் அளவு:








மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படமும், பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படமும் பொங்கல் பரபரப்பை தற்போதே டோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளன. ஜனவரி 11ல் கைதி நம்பர் 150 திரைப்படமும், ஜனவரி 12ல் கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படமும் திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இப்படங்களை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த சிரஞ்சீவி கைதி நம்பர் 150 படத்தின் சுவரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஒன்று டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவது. சிரஞ்சீவியின் மனைவி சுரேக்காவின் சகோதரர் அல்லு அரவிந்தின் மகன் தான் அல்லு அர்ஜூன். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கு இணையாக அல்லு அர்ஜூனை சிரஞ்சீவி கருதுகின்றார். ஏற்கனவே ராம் சரண் கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவியுடன் நடனமாடுவது குறித்து தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அல்லு அர்ஜூன் இப்படத்தில் தலைகாட்டியிருப்பதாக சிரஞ்சீவி கூறியுள்ளது மெகா குடும்ப ரசிகர்களிடம் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.


0 comments:

Post a Comment