பார்ட்-2 தெரியும்.. பார்ட்-2.5 தெரியுமா..?
02 ஜன,2017 - 16:31 IST
கடந்த 2013ல் மலையாளத்தில் பாவனா நடித்த 'ஹனி பீ' என்கிற படம் வெளியானது. ஆசிப் அலி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை நடிகர் லாலின் மகனான ஜூனியர் லால் இயக்கியிருந்தார். வெறும் மூணேகால் கோடியில் உருவான இந்தப்படம் சுமார் 12 கோடியைத்தாண்டி வசூலித்து மலையாள திரையுலகை வாய்பிளக்க வைத்தது.. காதல் படம் தான் என்றாலும் அதையே வித்தியாசமான ட்ரீட்மென்ட்டில் சொல்லியிருந்தார்கள். கிட்டத்தட்ட கேங்ஸ்டர் பட பாணியில் படமாக்கியிருந்தார்கள்.
இப்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஜூனியர் லால்.. முதல் பாகத்தில் நடித்த அதே ஆட்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள். படத்திற்கு 'ஹனி பீ-2 ; செலிபரேஷன்ஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தில் இதுவரை இல்லாத புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளனர் படக்குழுவினர். அதாவது இந்தப்படத்தின் தொடர்ச்சியாக ஹனி பீ-2.5' என்கிற படத்தையும் அதே படப்பிடிப்பு தளத்தில் வைத்தே படமாக்கி வருகிறார்கள்.. இதில் கதாநாயகனாக ஆசிப் அலியின் தம்பி அஸ்கர் அலி அறிமுகமாகிறார்..
இரண்டாம் பாகத்துக்கும் இந்தப்படத்திற்கும் தொடர்புடைய நடிகர்களும் ஏறக்குறைய ஒரே ஆட்கள் என்பதால் இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் நடத்தி வருகிறார்கள்.. இது எந்த மாதிரியான திரைக்கதை அமைப்பு என்பது படம் வெளிவரை யாராலும் யூகிக்க முடியாது என்கிறார்கள்.. ஆனால் இரண்டு படங்களும் தனித்தனியாக வெவேறு நாட்களில் போதுமான இடைவெளியில் தான் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம்.
0 comments:
Post a Comment