2017ல் பிசியாகும் மகேஷ் பாபு
02 ஜன,2017 - 17:23 IST
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முன்னணி நடிகராக உயர்ந்த பின்னர் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஆக்ஷ்ன் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அப்படத்திற்கு பின்னர் 2017ல் தான் நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து அறிவித்துள்ளார். புத்தாண்டை கொண்டாட தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றுள்ள மகேஷ் பாபு டுவிட்டரில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பையும் மகேஷ் பாபு வெளியிட்டார்.
மகேஷ் பாபுவின் 24வது படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் தன்னய்யா தயாரிக்கவுள்ளார். மகேஷ் பாபுவின் 25வது படத்தை இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் தயாரிப்பாளர்கள் அஸ்வின் தத் மற்றும் தில் ராஜூ இணைந்து தயாரிக்கின்றனர். மகேஷ் பாபுவின் 26வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளார். இதனை டுவிட்டரில் மகேஷ் பாபு அறிவித்துள்ளார். 2017ல் வரிசையாக படங்களில் நடிக்க மகேஷ் பாபு திட்டமிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment