டைகர் ஜிந்தா ஹை படம் டிசம்பர் 22 ல் ரிலீஸ்
08 ஜன,2017 - 15:23 IST
தற்போது ட்யூப்லைட் படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் சல்மான் கான். ட்யூப்லைட் படத்தின் வேலைகள் முடிவடைந்த பிறகு டைகர் ஜிந்தா ஹை என்ற படத்தில் சல்மான் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் சூட்டிங் மொராக்கோவில் வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளதாம். இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 22 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். டைகர் ஜிந்தா ஹை படத்தை, சல்மான் கான் நடித்த சுல்தான் படத்தை இயக்கிய டைரக்டர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்க உள்ளார். இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடிக்க உள்ளாராம். இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்க உள்ளார்.
0 comments:
Post a Comment