Sunday, January 22, 2017

ரா ஏஜென்டாக நடிக்கும் ராம் சரண்


ரா ஏஜென்டாக நடிக்கும் ராம் சரண்



22 ஜன,2017 - 09:58 IST






எழுத்தின் அளவு:








ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து வரும் ராம் சரண், தமிழில் சூப்பர் ஹிட்டான தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். துருவா எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த தனிஒருவன் டோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க ராம் சரண் ஒப்பந்தமாகியுள்ளார். அதனுடன் இயக்குனர் க்ரிஷ் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் ராம் சரண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் க்ரிஷ் அப்படத்தின் நாயகன் வருண் தேஜுடன் இணைந்து ராயபரி எனும் படத்தை துவங்கினார். ஆனால் அப்படம் அறிவிப்பின்றி கைவிடப்பட்டது. தற்போது அப்படத்தை ராம் சரணை வைத்து மீண்டும் உருவாக்கும் முயற்சியில் க்ரிஷ் இறங்கியுள்ளார். ரா ஏஜென்ட் வேடத்தில் ராம் சரண் நடிக்கவிருக்கும் இப்படத்தின் வேலைகள் 2017 செப்டம்பரில் துவங்கும் என கூறப்படுகின்றது.


0 comments:

Post a Comment