Sunday, January 22, 2017

மார்ச்சில் விஜய்யின் புதிய படம் ஆரம்பம்!









மார்ச்சில் விஜய்யின் புதிய படம் ஆரம்பம்!



22 ஜன,2017 - 09:30 IST






எழுத்தின் அளவு:








பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் விஜய் நடித்து வந்தபோதே அடுத்தபடியாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் செய்திகள் வெளியாகின. அதோடு, பொங்கலுக்கு பைரவா வெளியாக யிருந்த நிலையில், ஜனவரி மாதமே விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் பொங்கல் முடிந்ததும் நடிப்பார் என்றார்கள். ஆனால் இப்போதுவரை அந்த படம் தொடங்கப்படவில்லை.

அதுகுறித்து விசாரித்தபோது, விஜய் 61வது படத்தில் விஜய் தலையில் அதிக முடியுடன் தாடி, மீசை வைத்த கெட்டப்பில் நடிக்கயிருக்கிறார். முதலில் அவருக்கு விக் வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தாராம் அட்லி. ஆனால், பைரவா படத்தில் விஜய் விக் அணிந்து நடித் தது பெருவாரியான ரசிகர்களை கவரவில்லையாம். அதன்காரணமாக, ஒர்ஜினல் தலைமுடி, தாடி, மீசையுடன் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அதன்காரணமாக விஜய்க்கு முடிவளர்வதற்காக படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.




Advertisement








அட்லியின் ஹீரோயின் செண்டிமென்ட்!அட்லியின் ஹீரோயின் செண்டிமென்ட்! பிப்ரவரிக்கு தள்ளிப்போன சிவலிங்கா பிப்ரவரிக்கு தள்ளிப்போன சிவலிங்கா










0 comments:

Post a Comment