அட்லியின் ஹீரோயின் செண்டிமென்ட்!
22 ஜன,2017 - 09:21 IST
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு ராஜாராணி படத்தில் இயக்குனரானவர் அட்லி. அதுவரை அருண்குமாராக இருந்தவர் அந்த படத்தில் இருந்து அட்லியாக உருவெடுத்தார். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ராஜா ராணி படத்தின் முதல் காட்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த அந்த படம் அட்லிக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது.
அதையடுத்து விஜய் நடித்த தெறி படத்தை இயக்கிய அட்லி, மீண்டும் விஜய்யை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். அதோடு, தனது முதல் படத்தில் நயன்தாரா, நஸ்ரியா என்ற இரண்டு நாயகிகளை நடிக்க வைத்த அவர், தெறி படத்திலும் சமந்தா, எமிஜாக்சனை நடிக்க வைத்தார். தற்போது விஜய்யின் 61வது படத்திலும் சமந்தா, காஜல்அகர்வாலை நடிக்க வைக்கிறார். இப்படி தனது ஒவ்வொரு படங்களிலுமே இரண்டு ஹீரோயின்களை நடிக்க வைக்கும் அட்லி சில செண்டிமென்ட்டுகளை கடைபிடிக்கிறாராம்.
அதாவது, சூப்பர் ஹிட் படங்களின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் தனது படப்பிடிப்பை நடத்துவது. சில மெகா ஹிட் படங்கள் வெளியான தேதிகளில் தனது ப டத்தை வெளியிடுவது என்கிற செண்டிமென்டுகளை கடைபிடிக்கிறாராம்.அதேபோல்தான் இரண்டு ஹீரோயின் இடம்பெற்ற தனது முதல் படம் வெற்றி பெற்றதால், இரண்டு நாயகி செண்டிமென்டை தனது அடுத்தடுத்த படங்களிலும் அவர் தொடர்ந்து வருகிறாராம்.
0 comments:
Post a Comment