Friday, January 20, 2017

ஆமா, நான் பொறுக்கி தான் : ஜெய் ஆகாஷ் படம்


ஆமா, நான் பொறுக்கி தான் : ஜெய் ஆகாஷ் படம்



20 ஜன,2017 - 11:53 IST






எழுத்தின் அளவு:








ராமகிருஷ்ணா படத்தில் அறிமுகமான ஜெய் ஆகாஷ். அவ்வப்போது அதிரடியாக படம் தயாரிப்பார், நடிப்பார். தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஆமா நான் பொறுக்கிதான். இதில் ஜெய் ஆகாஷ் ஜோடியாக அனிஷா, தீப்தி நடிக்கிறார்கள். இவர்கள் தீவிர பவர்ஸ்டார் சீனிவாசன், பொன்னம்பலம், சாம்ஸ், சுமன் ஷெட்டி, கயல் வின்செண்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார், யு.கே.முரளி இசை அமைக்கிறார். ஜீ பிலிம் பேக்டரி சார்பில் ஷாஜகான், ஆனந்தன் தயாரிக்கிறார்கள். படம் பற்றி ஜெய் ஆகாஷ் கூறியதாவது:

'நெகட்டிவ் வைபரேஷன் எப்போதுமே சினிமாவில் பாசிட்டிவ் ரிசல்ட் தந்திருக்கிறது. உதாரணத்திற்கு பிச்சைக்காரன், நானும் ரவுடிதான் இப்படி பல படங்களை சொல்லலாம். இதுவும் மிக பரபரப்பான கதையாக இருக்கும். முதல்முறையாக பெரும் பொருட்செலவில் பல நாடுகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படப்பிடிப்பு 60 நாட்களில் முடியும். 3 கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெறும். விறுவிறுப்பான கதையில் காமெடியும் இருக்கிறது. முதல்முறையாக 5 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். அதில் ஒன்று பார்வையற்ற கேரக்டர். இந்த ஆண்டின் தொடக்கமே தமிழ் சினிமாவுக்கு மிக அருமையாக இருக்கிறது. 'ஆமா, நான் பொறுக்கிதான்' படம் என் கேரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும். மே மாதம் வெளியாகிறது. என்றார் ஜெய் ஆகாஷ்.


0 comments:

Post a Comment