Friday, January 20, 2017

பிளாஷ்பேக்: படப்பிடிப்புக்காக கிராமத்தை காலி செய்த மக்கள்


பிளாஷ்பேக்: படப்பிடிப்புக்காக கிராமத்தை காலி செய்த மக்கள்



20 ஜன,2017 - 11:43 IST






எழுத்தின் அளவு:








தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று அன்னக்கிளி. இசை அமைப்பாளர் இளையராஜா அறிமுகமான படம் என்பதோடு பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய படம். செல்வராஜின் கதைக்கு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை வசனம் எழுதினார். சிவகுமார், சுஜாதா, ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெயலட்சுமி நடித்திருந்தனர்.

ஒரு மலைக்கிராமத்துக்கு வரும் பள்ளி ஆசிரியர் மீது அந்த கிராமத்து பெண் ஒருத்தி ஒரு தலையாய் காதலிக்கிற கதை. ஆசிரியராக சிவகுமாரும், கிராமத்து பெண்ணாக சுஜாதாவும் நடித்திருந்தனர். தேங்காய் சீனிவாசன் வில்லன். சுஜாதைவை அடைய நினைப்பவர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கோத்தகிரி மலையில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. அங்கு கூட்டு விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் படப்பிடிப்புக்காக ஊரை காலி செய்து படப்பிடிப்பு முடியும் வரை ஒதுங்கி இருந்தார்கள். படிப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததோடு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தார்கள். காரணம் அந்த மக்கள் சினிமாவையும் பார்த்ததில்லை. சினிமா நடிகரையும் பார்த்தில்லை. அவர்கள் பார்த்த முதல் நடிகர் சிவகுமார். "எம்புட்டு அழகா இருக்காரு இந்த மனுஷன்"னு வியந்திருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment