Friday, January 20, 2017

கிடைக்கிற வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும்! - பிளாக் பாண்டி


கிடைக்கிற வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும்! - பிளாக் பாண்டி



20 ஜன,2017 - 13:16 IST






எழுத்தின் அளவு:








அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷின் நண்பனாக நடித்து பிரபலமானவர் பிளாக் பாண்டி. தொடர்ந்து தெய்வத்திருமகள், வேலாயுதம், சாட்டை, பாகன், ஜில்லா, வெண்ணிலா வீடு, பேய்கள் ஜாக்கிரதை, தோழா என பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தார். தற்போது கிரகணம், கனவு வாரியம், பண்டிகை, களறி உள்பட பத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் பற்றி பிளாக் பாண்டி கூறுகையில், இந்த படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருந்தபோதும் சில படங்களில் மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுக்கவும் டைரக்டர்கள் வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதனால் காமெடி மட்டுமே பண்ணும் நடிகராக இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் என்று சொல்லும் அளவுக்கு தற்போது எனக்கு நல்ல கதாபாத்திரங்ளில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதற்கிடையே, சென்னையில் ஒரு ரெக்கார்ட்டிங் தியேட்டர் தொடங்கியிருக்கிறேன். இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. ஆனால் எடுத்தோம் கவுத்தோம் என்று இறங்க மாட்டேன். காரணம் சமீபகாலமாக நிறைய இசையமைப்பாளர்கள் வருகிறார்கள். ஆனால் பெரிதாக அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் நான் இசையமைப்பாளராக சரியான கதைக்களம் அமைந்தால் மட்டுமே இசையமைப்பேன். நல்ல டைரக்டர், நல்ல கம்பெனி படங்கள் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்களைபோன்று இசையமைக்க வேண்டும். இல்லையேல் இருக்கிற வேலையை ஒழுங்காக பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

மேலும், ஒரு படத்தில் வக்கீல் வேடத்தில் நடிக்கிறேன். என்னை நம்பி கொடுத் தார்கள். இது மாதிரி மாறுபட்ட கேரக்டர்களில் என்னால் நடிக்க முடியும் என்ப தற்கு இதெல்லாம் உதாரணம். அதனால் எதிர்காலத்தில் நிறைய அழுத்தமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு நம்முடைய டைரக்டர்கள்தான் கைகொடுக்க வேண்டும் என்கிறார் பிளாக் பாண்டி.


0 comments:

Post a Comment