Wednesday, January 11, 2017

நிவின்பாலி படத்தில் கைகோர்க்கும் பாலிவுட் ஜாம்பவான்கள்..!


நிவின்பாலி படத்தில் கைகோர்க்கும் பாலிவுட் ஜாம்பவான்கள்..!



12 ஜன,2017 - 08:11 IST






எழுத்தின் அளவு:








மொட்டைத்தலையும் மூக்கில் வளையமுமாக நிவின்பாலி காட்சி தரும் 'மூத்தோன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தான் இப்போது கேரளாவில் டாக் ஆப் தி டவுன் ஆக இருக்கிறது.. கல்லூரி மாணவிகளின் சாக்லேட் பாயாக நிவின்பாலி இருந்தாலும் கூட, அவர் அதை ஒருபோதும் மெயின்டெய்ன் பண்ணவேண்டும் என நினைத்ததில்லை. தனது நடிப்புக்கு தீனிபோடும் கேரக்டர்களாகவே அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.. அந்தவிதத்தில் நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் 'மூத்தோன்' கதையை கூறியதும் நிவின்பாலி உடனே ஒப்புக்கொண்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

லட்சத்தீவில் இருந்து தனது அண்ணனை தேடி மும்பைக்கு வரும் பதினான்கு வயது சிறுவனை மையப்படுத்திய கதை இது.. இந்தப்படத்தில் மிக வலுவான டெக்னீசியன்களை கூட்டணி சேர்த்துள்ளார் இயக்குனர் கீது மோகன்தாஸ். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக அவரது கணவர் ராஜீவ் ரவியே பணியாற்ற உள்ளார். இந்தப்படத்தின் வசனங்களை எழுதுபவர் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப்.. இந்தப்படத்தை தயாரித்து வழங்குவதில் தானும் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறது. ஆக 'மூத்தோன்' படம் படப்பிடிப்புக்கு முன்னதாகவே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


0 comments:

Post a Comment