அதர்வா எதிர்பார்க்கும் காமெடி படம்!
10 ஜன,2017 - 08:47 IST
ஈட்டி, கணிதன் படங்களுக்குப்பிறகு செம போதை ஆகாத, ஜெமினிகணே சனும் சுருளிராஜனும், ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இதில் ராஜமோகன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த ருக்குமணி வண்டி வருது படம் பைனான்ஸ் பிரச்சினையில் நின்று கொண்டிருக்கிறது. செம போதை ஆகாத மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன.
இதில், செம போதை ஆகாத படத்திற்கு முன்னதாகவே ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படம் திரைக்கு வருகிறதாம். அதர்வாவுடன் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ போன்று சூரியும் நடித்துள்ள இந்த படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி போகன்கர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கூடவே காமெடிக்காக மொட்டை ராஜேந்திரனும் இந்த படத்தில் இணைந்துள்ளார். அந்த வகையில், அதர்வா-சூரி-ராஜேந்திரன் மூன்று பேரும் படம் முழுக்க செம காமெடி கலாட்டா செய்திருக்கிறார்களாம்.
தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த மாதம் திரைக்கு வந்து விடும் என்கிறார்கள். மேலும், இந்த காமெடி படத்தை பெரிதாக எதிர்பார்க்கும் அதர்வா, பத்ரி இயக்கத்தில் தான் தயரித்து நடித்துள்ள செம போதை ஆகாத படத்தை இந்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்திற்கு பிறகுதான் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.
0 comments:
Post a Comment