விஜய் பிறந்தாளில் தல57 ரிலீஸ் செய்யப்டுகிறதா?
அஜித், விஜய் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. தல அஜித்தின் 57வது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக, அதாவது ஜுன் மாதம் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்தன. அதோடு படம் ஜுன் 22ம் தேதி வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜுன் மாதம் 22ம் தேதி மட்டும் இப்படம் வெளியானால் எப்படி இருக்கும் என்றே யோசிக்க முடியவில்லை. ஏனெனில் இளையதளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று.
பிரபல நடிகரான விஜய் பிறந்தநாள் அன்று தல அஜித்தின் படம் வருவது மிகவும் சந்தோஷமான விஷயம். அன்றைய தினம் மட்டும் வெளியானால் தமிழ்நாடே அதை திருவிழா போல் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் தல 57 படக்குழு எப்போது படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment