Sunday, January 8, 2017

ஓம் பூரி மரணத்திற்கு இது தான் காரணம்


ஓம் பூரி மரணத்திற்கு இது தான் காரணம்



08 ஜன,2017 - 16:03 IST






எழுத்தின் அளவு:








நடிகர் ஓம் பூரியின் திடீர் மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், ஓம் பூரியின் மரணத்திற்கான என்ன காரணம் என குறிப்பிடப்படவில்லையாம். ஓம் பூரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்ததில், கடைசி சில நாட்களாக அவர் டென்ஷனுடனேயே இருந்து வந்தாராம். தங்கள் குடும்பத்தில் உள்ள சட்டப்பிரச்னைகள் காரணமாக குழப்பத்துடனும் இருந்து வந்தாராம். ஜனவரி 5 ம் தேதி பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மது குடித்துக் கொண்டே இருந்தாராம்.

ஓம் பூரியின் தலையில் ஏற்பட்ட காயம் தான் அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் என போலீசார் பதிவு செய்துள்ளனர். அந்த காயம் அவர் சுவரில் முட்டியதால் ஏற்பட்டதாம். இது தொடர்பாகவும் மருத்துவமனையில் சில தடயவியல் மற்றும் உடல்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டதாம். போலீஸ் அறிக்கையின்படி இது தற்செயலாக நிகழ்ந்த மரணம் எனவும், உயிர் பிரிந்த சமயத்தில் ஓம் பூரி தனியாக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment