Saturday, March 11, 2017

மார்ச் 16-ல் டிரைலர், 25ல் இசை : பாகுபலி-2 பரபரப்பு ஆரம்பம்


மார்ச் 16-ல் டிரைலர், 25ல் இசை : பாகுபலி-2 பரபரப்பு ஆரம்பம்



11 மார்,2017 - 16:57 IST






எழுத்தின் அளவு:








பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலரது நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய சரித்திர திரைப்படமான ‛பாகுபலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான ‛பாகுபலி: தி கன்குலூசன்' திரைக்கு தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் வெளியீட்டின் போது பாகுபலி-2 திரைப்படம் 2017 ஏப்ரலில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பாகுபலி-2 2017 ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர படக்குழு தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. மார்ச் 16ல் மும்பையில் நடைபெறும் பாகுபலி-2 புரமோஷன் நிகழ்ச்சியில் இப்பட டிரைலர் வெளியிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ல் பாகுபலி-2 பட பாடல்கள் வெளியீட்டு விழா ஐதரபாத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி பாகுபலி-2 படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.


0 comments:

Post a Comment